மிஸ் தென் இந்தியா 2016, மிஸ் குயின் ஆஃப் இந்தியா 2016, மிஸ் தமிழ்நாடு ஆகிய பட்டங்களை வென்றவர் மீரா மிதுன். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாங்கள் ஆகிய படங்களில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
அழகிப்போட்டிகளில் ஆர்வம் உள்ள இவர் வரும் ஜும் மாதம் 3ம் தேதி சென்னை வடபழனியில் அழகிபோட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், சமீபத்தில் போலீசில் புகார் அளித்த அவர், தாம் தனியாக அழகிப் போட்டி நடத்த அனுமதி பெற்றுள்ளதாகவும், அதன் காரணமாக தொழில் போட்டியால் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த மிஸ் தென் இந்தியா பட்டத்தை பறிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியுள்ளது. மேலும், தாங்கள் கொடுத்த பட்டத்தை மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது