September 30, 2016 தண்டோரா குழு
பொதுவாக காளான் நிலத்திலோ,பாறைகள் மேலோ அல்லது மரத்தின் தண்டுகளின் மேலோ வளருவதை கவனித்திருக்கிறோம். ஆனால், ரயிலின் தரையில் அவை வளர்ந்துள்ள புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை எடுத்தவர் எந்த ரயிலில், எப்படி அதை கவனித்து,அந்த புகைப்படத்தை எடுத்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த புகைப்படத்தில் காணப்படுவது உண்மையான காளான்கள் தான்.
சமுக வலைத்தளமான ரெட்டிட் மூலம் இந்த அரிய புகைப்படத்தை டிபோபி என்பவர் வெளியிட்டார். இந்திய ரயில் நிறுவனம் அதில் பயணிப்பவர்களுக்கு புதிய, ஆரோக்கியமான காளான் சூப்பை தருவதற்காக அவர்கள் அதை வளர்க்கிறார்கள் என்று அப்புகைப்படத்தோடு இந்த குறிப்பையும் வெளியிட்டிருந்தார்.
சமுக வலைத்தளத்தில் இதை குறிப்பை பார்த்த ஒருவர், ரயிலில் காளான் வளர்வது லாபமே. ஒருவருக்கு காளான் சாப்பிட விரும்பினால், தேவையான காளானை நீங்களே பறித்து அதை ஒரு பையில் எடுத்துக்கொண்டு சமைத்து தர கொடுக்கலாம் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் மற்றொருவர், 12 மணிநேர பிரயாணங்களுக்கு மட்டுமே அது சாத்தியம் என்று கூறியுள்ளார்.
ஆனால் எது எப்படியோ, ரயிலில் நீங்கள் பிரயாணம் செய்யும் போது, அவர்கள் தரும் காளான் சூப்பை எடுத்துக்கொள்ளும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனம்.