September 30, 2016
தண்டோரா குழு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த சில தினங்களாக பயங்கிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க தொடர்ந்து போராடி வருகிறது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டு பல பயங்கிரவாதிகளை அழித்ததுடன் அவர்களது முகாம்களையும் அழித்தது.
இந்த நடவடிக்கைக்கு பிரமதர் மோடியையும், ராணுவ அதிகாரிகளையும் பலர் பாராட்டி வரும் நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய பிரதமர் மோடிக்கு நன்றி.ஒரு பிரதமராக, பிரதமர் உருப்படியான காரியத்தை செய்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த முதல் நல்ல காரியம் இது தான். இதற்காக நானும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அவரது இந்த செயலுக்கு ஒட்டுமொத்த நாடும், காங்கிரசும் ஆதரவு தெரிவிக்கிறது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தற்போது பாராட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.