September 30, 2016 தண்டோரா குழு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நவம்பர் மாதம் நடைபெற இருந்த சார்க் மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கிடையே நல்லுறவு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கபட்டது தான் சார்க் அமைப்பு. இவ்வமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூடான் ஆகிய 8 நாடுகள் உறுப்புநாடாக உள்ளது.
இந்தநிலையில்,பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் 19 – வது “சார்க் மாநாடு”, வரும் நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது.இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்தது.இந்தியாவைப்போல் ஆப்கானிஸ்தான்,வங்கதேசம்,பூடான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன.தற்போது இலங்கையும் மாநாட்டை புறக்கணித்தது.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் நடக்கவிருந்த இருந்த சார்க் மாநாடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சார்க் மாநாடு நடைபெறும் தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பூடான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகள் மாநாடு புறக்கணிப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.