October 3, 2016 தண்டோரா குழு
இந்தியாவின் உரி பகுதியில் பயங்கிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கிரவாதிகள் முகாம்கள் அளிக்கப்பட்டது பல பயங்கிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே உரி தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். இந்திய பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்ற நிலையே காணப்படுகிறது. உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த உலக நாடுகள் இந்தியாவிற்கு அதரவும்
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் பகுதிக்கும் இடையே இணையத்தளங்கள் மூலம் பயங்கிரவாதிகள் தொடர்பு கொண்டு செய்யல்ப்பட்டு வருவதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
இணைய தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் பயிற்சி குறித்தும், இந்திய தலைநகரான டெல்லியில் உள்ள கோன்னுக்ட் பகுதியில் அணு ஆயுத போரை எவ்வாறு செய்யல்ப்படுதுவது என்பதை குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு இணையதளங்களில் பதிவேற்றப்படும் இது போன்ற காணோளிகளை தீவிரமாக பாதுகாப்பு துறையினர் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உரி தாக்குதலுக்கு பிறகு, இது போன்ற வீடியோகளை பதிவேற்றி இஸ்லாமியர்கள் புனித போரில் ஈடுபட வாலிபர்களுக்கு அழைப்புவிடுகின்றனர். அவர்கள் எந்த தளத்தை பயன்ப்படுத்தி அதை பதிவேற்றுகின்றனர் என்பது குறித்து கண்காணித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.