October 3, 2016 தண்டோரா குழு
மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற ஜப்பானின் யோஷினேரி ஒஸ்மி என்ற பேராசிரியர் தேர்வு செய்யபட்டுள்ளார்.
2016ம் ஆண்டிற்கான மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. இவ்விருதுக்காக ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் யோஷினேரி ஒஸ்மி தேர்வு செய்யப் பட்டுள்ளார். உடல் செல்கள் தம்மை தாமே அழித்து கொள்வது பற்றிய ஆட்டோபேஜி என்ற ஆய்வு மேற்கொண்டதற்காக இந்த பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது.
ஜப்பானின், டோக்கியோ பல்கலையில் செல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றும் யோஷிநோரி, ஆட்டோஃபேஜி எனப்படும் செல்லியல் பிரிவில் நிபுணராக விளங்குகிறார்.
நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும் , நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும் அமைதிக்கான நோபல் பரிசு 7 ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வரும் 10ம் தேதியும் வழங்கப்படுகிறது.