October 4, 2016 தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் ஒரு கல்லூரியின் அலுவகத்திற்குள் முதலைகளை விட்ட நான்கு வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு டார்வின் என்னும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹம்ப்டி டூ நகரில் உள்ளது டாமினிம் கல்லூரி. கடந்த ஞாயிறன்று இக்கல்லூரியின் அலுவகத்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் அதற்குள் முதலைகளை விட்டு சென்றுள்ளனர்.
அலுவகத்திற்குள் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் முதலைகளை அங்கிருந்து மீட்டனர்.
வாயில் துணியால் கட்டப்பட்டும் நீண்ட நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமலும் மிகவும் பரிதாமாக நிலையில் முதலைகள் இருந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உப்பு தண்ணீரில் வசிக்கும் இந்த முதலைகள் இங்கு எப்படி வந்தது என தெரியவில்லை என கூறியுள்ளனர்.
இதுகுறித்து, விசாரித்த வந்த காவல்துறையினர் அங்கிருந்த கேமராவில் பார்த்தனர். அதில், தங்கள் முகத்தை தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை துணியால் மூடியிருந்த நான்கு மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடியை உடைந்து முதலைகளை ஒன்றன்பின் ஒன்றாக விட்டது தெரியவந்தது. மேலும்,அவர்கள் அந்த அறையை சூரையாடிவிட்டு, அங்கு இருந்து தப்பி சென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் தேடிவருகின்றனர்.