October 4, 2016 தண்டோரா குழு
இந்தியாவின் யூரி பகுதியில் ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசீன் லூங் 5 நாள் அரசு முறைப்பயணமாக இந்திய வந்துள்ளார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மேலும், இந்தியா சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன், சிங்கப்பூர் பிரதமர் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் யூரி பகுதியில் பயங்கரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என கூறினார்.
மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளே இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.