• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசித் தாக்குதல்

October 5, 2016 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலம் பீகானிர் பகுதிக்குச் சென்றிருந்த டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவரின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிகானீர் சென்றிருந்தார் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் வீட்டில் இருந்து வெளியே வரும் போது, அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் கெஜ்ரிவால் மீது மை வீசினார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை பிடித்தனர்.

இது தொடர்பாக இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தன் மீது நடத்தப்பட்ட மை வீச்சு தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், மை வீசியவர்களுக்கு வாழ்த்துகள் என்றும், அவர்களை கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு ஆதாரம் கேட்ட கெஜ்ரிவாலுக்கு, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் மீது மை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க