October 6, 2016 தண்டோரா குழு
கோவை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்த நெரிசலைத் தவிர்க்க மல்டி லெவல் கார் பார்கிங் அமைக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீஹரி சந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பார்வையிட வந்த சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீஹரி சந்திரன் அவர்கள் கோவை தொழில் வர்த்தக சபையில் தொழில்துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கோவை ரயில் நிலையம் மிகவும் சிறப்பானது. பல லட்சம் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிகளுக்காக ரயில்வே துறையின் மூலம் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பயணிகளின் முக்கிய பிரச்சனையாக வாகன நிறுத்தம் உள்ளது. அதனை தீர்க்க மல்டி லெவல் கார் பார்கிங் சிறந்த முறையில் அமைத்துத் தரப்படும் எனவும், ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் போன்றவை பரிசோதனை செய்யப்படும்,. சுத்தமாக சுகாதாரமான ரயில்நிலையம் அமைவதற்குப் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், போத்தனூர் பொள்ளாச்சி வழித்தடம் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
வடகோவை ரயில்நிலையத்தில் வியாபாரப் பொருட்கள் ஏற்றப்படுகிறது அதே போல் இருகூர் ரயில்நிலையத்தில் பொருட்கள் ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் கோவை நகரின் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்,சுற்றுசூழலும் பாதுகாக்கப்படும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்தனர். இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கூறுகையில் இருகூர் ரயில் நிலையத்தில் குடோன் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.