October 7, 2016 தண்டோரா குழு
இந்தியா பாகிஸ்தான் இடையில் போர் பதட்டம் நீடிப்பதை தொடர்ந்து இந்திய- பாக் எல்லை சீல் வைத்து கண்காணிக்கப்படும் என ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
யூரி மற்றும் சர்ஜிக்கல் தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பிற்கு சமரசம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. நாட்டின் பாதுகாப்பு படைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தான் நாட்டுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையையும் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சீல் வைக்கப்படும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.