October 7, 2016 தண்டோரா குழு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஹாருண் பாட்ஷா என்பவர் நெஞ்சுவலியால் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 1998 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் ஹாருண் பாட்ஷா. கோவை அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி என அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே குண்டு வெடிப்பு வழக்கில் 3 ஆயுள் தண்டனை பெற்ற கைதி அப்துல் ஒசீர் என்பவர் நேற்று முன்தினம் நெஞ்சுவலியால் கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கு சிறை துறை அதிகாரிகள் அலட்சிய போக்கு தான் காரணம், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிம்முன் அன்சாரி நேற்று கோவை மத்திய சிறையில் கைதிகளை சந்தித்த அவர் ஆயுள்தண்டனை கைதிகளுக்கு மன அழுத்தம் தீர சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஹாருண் பாட்ஷா என்பவர் நெஞ்சுவலியால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கைதிகளின் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழ்நிலை உருவாகாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்படுள்ளது.