• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் மேத்யூ புயலுக்கு 900 பலி

October 8, 2016 தண்டோரா குழு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரீபியன் பகுதியில் ஏற்பட்ட மாத்யூ புயலில் சிக்கி இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. அதன் விளைவாக அமெரிக்காவும்,ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.

இதனால் ஏற்பட்டுள்ள புயலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, ஏறக்குறைய 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் மாத்யூ புயல் நேரடித் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்புயலின் காரணமாக வெள்ளம் ஆறாக ரோடுகளில் ஓடியதால் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிவாயு நிறுவனங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவரச கால பிரகடனத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் அப்பகுதியில் அமல்படுத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அவசரக் காலத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவை தாக்கிய சாண்டி என்னும் புயலின் தாக்குதலை விட தற்போது தாக்கிய உருவாகியுள்ள ‘மேத்யூ புயல் தான் கொடூரமானது என ஒபாமா தெரிவித்துள்ளார்.

மக்கள் மேத்யூ புயலை எதிர்கொள்ள தயாராகி வரும் வேளையில், இந்தப் புயலின் தாக்கத்தால் அதிக அளவில் உயிர்ச்சேதம் உண்டாக வாய்ப்பு இருப்பதாக, தேசிய காலநிலை நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் புயலின் தீவிரம் குறைந்த பிறகே மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்புயலில் சிக்கி இதுவரை சுமார் 900 பேர் பலியாகி யுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க