மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் 20 – 20 போட்டியை இந்திய அணி நாளை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்தியத் தீவுகளுடான போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரிஷப் பந்த்தின் சமீபத்திய ஆட்டம் குறித்து செய்தியாளர்கள் கோலியிடம் கேள்வி எழும்பினர்.
அதற்கு பதிலளித்த கோலி,”ரிஷப் பந்த் அவரது திறமையை நிரூபிப்பதற்கு தேவையான இருப்பை வழங்குவது அனைவரது பொறுப்பு என்று நினைக்கிறேன். போட்டியின்போது அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டால் நீங்கள் மைதானத்தில் தோனி தோனி என்று குரல் எழுப்பி அந்த இளம் விக்கெட் கீப்பரைக் கிண்டல் செய்ய வேண்டாம். இது மரியாதையாக இல்லை. எந்த வீரருக்கு இந்த நிலைமை வரக்கூடாது. உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது நிச்சயம் உங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும்” என்றார்.
இந்திய அணியில் விக்கெட் கீப்பிங்கிற்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எம்.எஸ்.தோனி, உலகக்கோப்பை போட்டிக்குப் பின் விளையாடாமல் இருந்து வருகிறார். தோனி ஒருவேளை ஓய்வு அறிவித்தால், பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் சிறந்து விளங்கும் வீரரைத் தயார் செய்யும் முனைப்பில் இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கு தேர்வுக் குழு அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்