• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போக்குவரத்தை கட்டுப்படுத்த முன்வந்த டெல்லி பெண்கள்

October 11, 2016 தண்டோரா குழு

பெண் குழந்தைகளைப் பாதுகாத்து போற்றும் நோக்கத்தில் இன்று சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகள் அறிப்பின்படி கடந்த 2012ம் அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டது.

இந்நாளில் ஆண் பெண் சமத்துவத்தை உணர்த்தும் வண்ணம், டெல்லியை சேர்ந்த பெண்கள் குழு, போக்குவரத்துக்கு கட்டுபாட்டு தலைவர்களாக செயல்பட துவங்கினார்கள்.

டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக சேர்ந்து போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆண் பெண் சமத்துவத்தை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு வர துண்டு பிரசாரம் விநியோகித்து மற்றும் பதாகைகளையும் அவர்களுடைய பார்வைக்கு வைத்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குழந்தை வளர்ச்சியை குறித்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பெண்கள் மேற்கொள்வார்கள் என்னும் இந்த திட்டத்தை கொண்டு வந்தனர். பெண்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் பாகுபாடுகளை உடைத்தெறிந்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் இணைந்து செயல்ப்பட்டு வருகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்திய தூதர் தோமஸ் கொஸ்லௌச்கி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து,சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

டெல்லியில் உள்ள ராஜ்பத், மண்டி ஹவுஸ், பாபா கராக் சிங்க் மார்க் மற்றும் விண்ட்சொர் சர்கில் ஆகிய இடங்களில் சுமார் இரண்டு மணி நேரம் ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு துணையாக டெல்லி காவல்துறையினர் அவர்களுடன் சென்றனர்.

டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருந்தேன். அங்கு வருபவர்களுக்கு துண்டு பிரச்சாரமும்,பெண் குழந்தைகளுக்கு கல்வி தருவதின் அவசியத்தையும்,ஆண் பிள்ளைகளுக்கு சமமாக நடத்த வேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். பாதசாரிகள் கடக்கும் இடத்திற்கு முன்பாக வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துபவர்களுக்கு அங்கு இருந்து விலகி சிறிது பின்னால் நிறுத்தும்படி அறிவுதினோம் என்று அந்த ஊர்வலத்தில் பங்கேற்ற சம்பா(19) என்னும் பெண்மணி கூறினார்.

மேலும், எங்களுடைய சமுகத்தில் உள்ள பெண் குழந்தைகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர். அதை மாற்ற விரும்புகிறேன். அந்த மாற்றத்தின் முயற்சியில் நான் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க