October 11, 2016 தண்டோரா குழு
சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக செல்போன்களின் பேட்டரிகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளாவதால்,அவற்றை சுவிட்ஆப் செய்யும் படி சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சாம்சங் நிறுவனம் உலகம் முழுவதும் மொபைல் விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகிறது.அந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக செல்போனை அண்மையில் அறிமுகம் செய்தது. ஆனால்,அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் செல்போனின் பேட்டரிகள் வெடித்து சிதறுவதாக தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.
இதையடுத்து, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன் உற்பத்தியை நிறுத்தியது சாம்சங் நிறுவனம். இதனால் பல நாடுகளின் விமான சேவை நிறுவனங்களும், விமான பயணத்தின் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போன்களை ஆன் செய்ய தடை விதித்தது. மேலும், பல முக்கிய செல்போன் விற்பனை நிறுவனங்களும் இவ்வகை போன்களை விற்பனை செய்வதை முற்றிலும் நிறுத்தியது.
இந்நிலையில்,கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறுவது குறித்து சிறந்த வல்லுனர்களும் புலானய்வு அதிகாரிகளும் விசாரணை செய்து வருகிறார்கள்.ஆகையால், கேலக்ஸி நோட் 7 ரக போன்களை வைத்திருக்கும் பயனாளர்கள், செல்போனை சுவிட் ஆப் செய்து வைக்குமாறும், அவற்றை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்குமாறும் சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.