October 12, 2016 தண்டோரா குழு
ஒரு மனிதனுக்கு காதல் எப்போது வரும் எந்த வயதில் வரும் என்பது யாருக்கும் தெரியாது அதற்கேற்ப சீனாவை சேர்ந்த 71 வயதுடைய ஒருவர் 114 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சீனாவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த ஜெங் என்பவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரயில் விபத்தில் சிக்கி இரண்டு கால்களையும் இழந்த சீனாவின் பாச்சு என்னும் இடத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்தார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த ஜாங் சுயிங் அவரை அன்பான முறையில் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது, 71 வயது நிரம்பிய ஜெங் ஒரு வருடத்திற்கு முன்பு அதே மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது எதார்த்தமாக தன்னை அன்பாக கவனித்து வந்த ஜாங் சுயிங்கை பார்த்துள்ளார். அவரை பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வசப்பட்டுள்ளார் ஜெங்.அவரை தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள விரும்புவதாக ஜெங் கூறியுள்ளார். ஆனால், தன்னைவிட 43 வயது இளையவராக இருந்த ஜெங்வுடன் உறவுமுறை வைத்துக்கொள்ள தயக்கம் காட்டியுள்ளார் சுயூங். இருந்தும் அவர் மேல் கொண்ட காதலால் பல மாதங்களாக சூயிங் இருந்த நர்சிங் ஹோமிற்கு சென்று விடாமல் அவரை திருமணம் செய்ய வலியுறுத்தி தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஜெங்.
இதனால் ஜெங்கின் காதலை புரிந்து கொண்ட சுயூங் ஜெங்கை அண்மையில் அதே மருத்துவமனையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.அவர்களுடைய திருமணத்தை உள்ளூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்தனர். மேலும், அவர்களுடைய திருமணம் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டது.
இது குறித்து ஜெங் கூறும்போது,
நான் படிக்காத ஏழை என் 20 வயதில் ஏற்பட்ட ரயில் விபத்தில் என் கால்களை இழந்தது வாழ்கையை தொலைத்து விட்டது போல் ஆகிவிட்டது. பல ஆண்டுகள் சமூக நல நிறுவனங்களுடன் இருந்ததால், எனக்கு ஒரு துணை கிடைக்கவில்லை. ஆனால், இப்படி ஓரு மகிழ்ச்சியான நாளை என் வாழ்வில் பார்பேன் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை என்றார். மேலும், தற்போது என் மனைவி சுயூங் என்னுடன் இருப்பதால் என் வாழ்வு முழுமையாக உள்ளது.