• Download mobile app
06 Oct 2024, SundayEdition - 3161
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் நடூர் பகுதிக்கு சென்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் – நாகை திருவள்ளுவன்

January 14, 2020

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் நடூரில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளைக் உடனடியாக நிறைவேற்ற வில்லை எனில் மீண்டும் நடூர் பகுதிக்கு சென்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகைதிருவள்ளுவன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடத்த டிசம்பர் 2 ம் தேதி சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் போராட்டம் செய்ததற்காக தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.நாகை திருவள்ளுவன் கைதிற்கு எதிராக பல இடங்களில் பேருந்துகள் தாக்கப்பட்டது. அந்த வழக்குகளிலும் நாகை திருவள்ளுவன் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் 43 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின்னர் இன்று காலை நாகை திருவள்ளுவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கோவை மத்திய சிறை வாசலில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் நாகை திருவள்ளுவனுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாகை திருவள்ளூவன்,

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மேட்டுபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தை காவல்துறை ஒரு விபத்து போல சித்தரித்தது எனவும்,
ஆனால் தீண்டாமை சுவரால்தான் அந்த விபத்து ஏற்பட்டது எனவும் தெரிவித்தார்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் எங்களைக் போன்றவர்கள் மீது மாநில அரசு பொய் வழக்கு பதிவு செய்து அடக்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.மேலும் மத்திய அரசு குடியுரிமை சட்டத்தைக் திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்த அவர்,பாஜகவின் ஊதுகோலாக செயல்படும் காவல் துறை மக்களுக்காக இயங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேட்டுபாளையம் நடூர் பகுதியில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளைக் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் மீண்டும் நடூர் பகுதிக்கு சென்று மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க