October 13, 2016
தண்டோரா குழு
மொபைல்போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தொலை தொடர்புத்துறை 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப்படுத்திய தொலைதொடர்பு துறை, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் மொபைல்போன் பயன்பாடு மற்றும் தொலைதொடர்பு துறையின் அசுர வேக வளர்ச்சியால் மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இதனால் 10 இலக்க எண்களை அளிப்பதில் மொபைல்போன்களுக்கு நிறுவனங்களுக்கு பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த போவதாகவும் தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.