October 13, 2016 தண்டோரா குழு
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் புகார் அளிக்க வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத் துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் பொது விநியோகத்திட்டத்திற்கு தேவைக்கான அரிசி கையில் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், தேவைப்படும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் நியாய விலை அங்காடிகளுக்கு உடனுக்குடன் நகர்வு செய்ய வேண்டுமெனவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் புகார் அளிக்க வேண்டிய எண்களையும் அறிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்த குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்படும்
044-28592828 என்ற எண்ணிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் 9445190660, 9445190661,9445190662 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.