March 1, 2016 Venki Satheesh
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் போதை வஸ்துக்களின் புழக்கம் அதிகமாகிவிட்டது என்ற ஒரு அறிக்கையின் படி ஹரியானா மாநிலம் சண்டிகாரில் நடத்தப்பட்ட சர்வேயில் மாணவ மாணவிகளிடம் போதை வஸ்துக்கள் விற்பனை அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் சூர்யாகாந்த் மற்றும் பி.பீ.பஜன்த்ரி ஆகியோர் இது குறித்து விசாரணை செய்தனர். அதில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்தது. அது சமீப காலமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உணவு இடைவேளை மற்றும் வீடு திரும்பும்போது சாப்பிடக்கூடிய தின்பண்டங்களில் மறைத்து வைத்து போதைப் பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தது.
இதில் குறிப்பிடும்படியாக மைதா மாவினால் செய்யப்படும் பரோட்ட மற்றும் சமோசா ஆகியவற்றில் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் சமீபகாலமாக மாணவ மாணவிகளிடையே போதைப் பழக்கம் அதிகமாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சண்டிகர் உயர்நீதி மன்றம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை, அது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது குறித்து புகார் தெரிவிக்கவும் ஒரு கால் சென்டரை துவங்கவும் உத்தரவிட்டது.
இதன் மூலம் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்துள்ளது. அதோடு மட்டும் நில்லாமல், அனுபவசாலிகளைக் கொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கும் வாழ்கையில் ஏற்பாடு செய்யவும், அதை அடுத்த கல்வியாண்டில் இருந்து பாட புத்தகத்தில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் பள்ளி டைரியில் குறித்து அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் சாப்பிடும் உணவிலும் கஞ்சாவைக் கலப்பது கொடுமையிலும் கொடுமை என மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.