October 15, 2016 தண்டோரா குழு
விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தவறி விட்டது.இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர் என மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓஸா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு கட்டுக்குள் வைத்திருப்போம்” என்று மத்தியில்ஆட்சிக்குவருவதற்குமுன்னர்பாஜகஉறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது இரண்டரை வருடங்கள் ஆகியும் விலைவாசி உயர்வைக் கட்டுப்பாட்டில்வைத்திருக்கமுயலவில்லை. பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துககொண்டேன்தான் போகிறது.
மேலும் சர்க்கரை, கடலை மாவு உள்பட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வரும் தீபாவளித் திருநாளை ஏழை, எளிய மக்கள் கொண்டாட மிகவும் சிரமப்படும் சூழ்நிலைதான் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் போது 10 ஆண்டுகளாகத் தொழில் துறை வளர்ச்சியுடன் இருந்தது.ஆனால் தற்போது நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் தொழில் துறை வளர்ச்சி படு பாதாளத்துக்குச் சென்று விட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷோபா ஓஸா கூறினார்.