• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொகுசு விமானத்தை விற்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

October 15, 2016 தண்டோரா குழு

விஜய் மல்லையாவின் தனி விமானத்தை மறு ஏலம் மூலம் விற்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என சேவை வரித் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடி கடன் பெற்றுக்கொண்டு திருப்பிச்செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பி சென்று விட்டார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

அவரைக் கைது செய்யும் முயற்சியில் மத்திய அரசாங்கம் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேவை வரி பாக்கிக்காக அவரது சொகுசு விமானத்தைச் சேவைவரித் துறை பறிமுதல் செய்து, கடந்த ஜூன் மாதம் ஏலம் விடப்பட்டது.

விமானத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதம் வரையே ஏலம் கேட்கப்பட்டது. இதனால், விமானத்தை மறு ஏலம் விடுவதற்கான அனுமதியை, சேவை வரித் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.

விமானம் ஏலம் தொடர்பாக கூடுதல் அவகாசம் கேட்டு சேவை வரித்துறை மனு அளித்திருந்தது இது தொடர்பாக நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, பி.பி கொலாபாவாலா ஆகியோர் முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

அதில் விமானத்தை மறு ஏலம் விடும் நடவடிக்கையை விரைவுபடுத்தும்படி, சேவை வரித் துறைக்கு நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டனர். மேலும், வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விமானத்தை விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மல்லையாவின் சொகுசு விமானம், 25 பயணிகளும், 6 ஊழியர்களும் அமரும் வகையில் அமைந்தது. மேலும், கருத்தரங்கக் கூடங்கள், சந்திப்பு அறைகள், குளியலறையுடன் கூடிய படுக்கையறை உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க