October 15, 2016 தண்டோரா குழு
சிரியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இன்று வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் அந்நாட்டின் அரசு இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவதியுறுகிறது. இப்போரால் அனுதினமும் அங்கு மக்கள் கொல்லப்படுகின்றனர். துப்பாக்கி, வான்வழி தாக்குதலினால் இன்னும் சில ஆண்டுகளில் சிரியா நாடேயில்லாமல் போய்விடு நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2011ல் சிரியா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த போது தொடங்கிய இந்த உள்நாட்டு போரில் இதுவரை சுமார் 300,000மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சோதனைச் சாவடியில் வெடிகுண்டு வெடித்ததில் சுமார் 17 பேர் பலியாயியனர் பலர் பலத்தகாயமடைந்துள்ளனர்.
சிரியவின் அசாஸ் நகரில் நேற்று இரவு துருக்கி நாட்டின் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சோதனைச்சாவடியில் வைக்கப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் சுமார் 17 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தக் குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் அனைவருமே போராட்டக்காரர்கள். எனினும் அவர்களில் மூவர் பொதுமக்களாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் உள்ள அலெப்போ மாநிலத்தில், சாமியா முன்னணி கிளர்ச்சி குழுவினர் அந்த சோதனைசாவடியை நடத்திவருகின்றார் என்றும், அவர்களுடைய ராஜாங்கம் அங்கு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது என்றும், பேபி அல் சலாமா என்னும் இடத்திற்கு சென்றுக்கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் நடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்து சிரியாவில் புரட்சிப்படைகள் கட்டுபாட்டிலுள்ள பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தி வருகிறார்கள். எனவே, இந்தத் தாக்குதலையும் ஐஎஸ் அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 6ம் தேதி போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் போராட்டக்காரர்களில் 29 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.