October 16, 2016 தண்டோரா குழு
தமிழக தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டைமாவட்டம், கத்தக்குறிச்சியைச்சேர்ந்தவர்சாந்தி.இவர்சர்வதேச அளவில் 11 பதக்கங்கள், தேசிய அளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் வென்றுள்ளார்.கடந்த 2006-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்இவர்800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆனால், இவர் மீது பாலினம் குறித்த சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, சாந்தி தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் வறுமையின் காரணமாக சாந்தி செங்கல் சூளையில் வேலை பார்த்தார். தற்போது, தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த பணியாளராக சாந்தி பணியாற்றிவருகிறார்.
இந்தநிலையில்,தடகள வீராங்கனை சாந்திக்கு தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தர அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான அரசாணை தமிழக அரசின் சார்பில் சாந்தியிடம் வழங்கப்பட்டுள்ளது.