• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பட்டாசு வெடிவிபத்தில் ஒருவர் பலி

October 21, 2016 தண்டோரா குழு

கோவை காந்தி பூங்கா அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் காந்தி பூங்கா அருகே அமைந்துள்ளது கேபிஆர் ஐஏஎஸ் அகடாமி உள்ளது. அதன் அருகில், ஒரு பட்டாசுக் கிடங்கில் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கிடங்கிற்கு அருகில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.பட்டாசுக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக உருவான புகை அருகிலுள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய கட்டடத்திற்கும் பரவியது.

இதனால் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும் புகை மூட்டம் காரணமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்களையும் அவர்கள் மீட்டனர்.

கோவையில் பட்டாசு கிடங்கில் தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகாசி பட்டாசு கிடங்கில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது கோவையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க