October 25, 2016
தண்டோரா குழு
ஆஸ்திரேலியா உள்ள கேளிக்கை பூங்காவில் (தீம் பார்க்) செவ்வாய்க்கிழமை காலையில் நேர்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர். பலர் காயமடைந்தனர்.அங்குள்ள பல்வேறு கேளிக்கை விளையாட்டுகளில் பொங்கும் ஆற்றில் படகுகளில் சாகச சவாரி செய்யும் விளையாட்டு உள்ளது. அதில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அந்தப் படகு மணிக்கு 27 மைல் வேகத்தில் செயற்கையான ஆற்றில் சென்றுகொண்டிரு்நதது. படகு திடீரென்று விபத்தில் சிக்கியது, அதில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டனர். வேறு இருவர் அதனுள்ளே சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் இருவர் ஆண்கள் என்றும் இருவர் பெண்கள் என்றும் போலீசார் கூறினர். இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இதையடுத்து அந்த பூங்கா மூடப்பட்டது.
இது குறித்து அதிர்ச்சி தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் “கேளிக்கை பூங்கா, மக்களை மகிழ்விக்கத்தானே ஒழிய, சோகத்தில் ஆழ்த்துவதற்கல்ல” என்றார்.இது குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.