• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

10 நாட்கள் 10 விதமான பணிகளில் ஈடுபட்ட மாணவிகள்

October 28, 2016 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஊரக வேளாண்மை பயிற்சித் திட்டத்தின் கீழ் இறுதியாண்டு வேளாண் மாணவிகள், நிழல் மையத்தோடு இணைந்து 10 நாட்கள் 10 விதமான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இது குறித்து கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
வேளாண் மாணவிகள் பத்து நாட்கள் ஈடுபட்ட பணிகள் வருமாறு:

முதல் நாள் (6.10.2016): முதல் நாள் முழுக்கப் பாக்கு மட்டையினை அச்சடித்தல், பாக்குத் தட்டுகளைத் துடைத்தல், பாக்கு மட்டைகளைக் கழுவி உலர்த்துதல் போன்ற வேலைகளை செய்தனர்.

இரண்டாம் நாள் (7.10.2016): உடற்பயிற்சி மையத்திற்கு சென்று வயதான மூத்த குடிமக்களுக்கு மூட்டு வலி, முதுகெலும்பு வளைதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கும் உடற்பயிற்சிகளைக் கற்றறிந்து கொண்டனர். அதே நாளில் அன்னூரில் உதவி வேளாண்மை இயக்குநர் தலைமையில் அரங்கேறிய அட்மா கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகளுக்கு கரும்புக் கரணை முறையினைக் கற்பித்தனர்.

மூன்றாம் நாள் (8.10.2016): கோவையைப் பிச்சைக்காரர்கள் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தினை முன்னிறுத்தி கோவை மாவட்ட ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர் லட்சுமி, காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோரைப் சந்தித்து கருத்தினை வலியுறுத்திப் பேசினர்.

நான்காம் நாள் (09.10.2016): ஆதரவற்ற இல்லங்களுக்குச் சென்று காலை உணவு பரிமாறினர். அதன் பின் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று, பிச்சை எடுக்கும் காரணிகள் பற்றியும் அதனை ஒழிக்கும் முறைகள் பற்றியும் கேட்டறிந்தனர்.

ஐந்தாம் நாள் (11.10.2016): மூளை வளர்ச்சியற்ற ஆதரவற்றோர் காப்பகத்திற்குச் சென்று அங்கு ஆதரவற்றோர் இருப்பிடத்தினை சுத்தம் செய்து கொடுத்தனர். பின் அவர்கள் உணவு உண்ண உணவினை அவர்களது அறைகளுக்கே சென்று கொடுத்தனர்.

ஆறாம் நாள் (12.10.2016): சாலைவிதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வட்டாட்சியர் அலுவலகம் உள்ளே இருக்கும் போக்குவரத்து காவல் நிலையம் சென்றனர். அங்கு சாலைவிதிகளைப் பற்றியும், விபத்துகள் வராமல் தடுக்கவும், விபத்து நேரிட்டால் கையாளும் முறைகளைப் பற்றியும் வண்டி ஓட்டுனர் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.

ஏழாம் நாள் (13.10.2016): அகில இந்திய வானொலி நிலையம், கோவை இராமநாதபுரத்திற்குச் சென்று அங்கு ஊரக வேளாண்மை பயிற்சி திட்டம்’ பற்றி வானொலியில் கலந்துரையாடினர்.

எட்டாம் நாள் (14.10.2016): 1000 மரக்கன்றுகளை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒன்பதாவது நாளான அக்டோபர் 15 மற்றும் பத்தாவது நாளான அக்டோபர் 16 ஆகிய நாட்களிலும் மரக்கன்றுகள் வழங்கும் பணியைத் தொடர்ந்தனர்.

இதன் மூலம் மாணவியர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க