October 31, 2016 தண்டோரா குழு
தொழில் தொடங்க உகந்த மாநில வரிசையில் தமிழகம் 18வது இடத்தில் இருக்கிறது. இதற்கு முன் 12 வது இடத்தில் இருந்தது. தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் தரவரிசையை மத்திய அரசின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டது. அதில், தமிழகம் 18-வது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தொழில் கொள்கை மற்றும் உலக வங்கியுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் தொடங்குவதற்கான உகந்த மாநிலங்கள் குறித்த பட்டியல் உலக வங்கி மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் தயாரிக்கப்பட்டது.
இந்தப் பட்டியலில், முதல் இரு இடங்களை ஆந்திரப் பிரதேசம், தெலுங்கான மாநிலங்கள் பகிர்ந்து கொண்டுள்ளன. முதல் இடத்தில் இருந்த குஜராத் மாநிலம் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் சத்தீஸ்கர், 5வது இடத்தில் மத்தியப் பிரதேசம், தொடர்ந்து ஹரியானா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உத்தராகண்ட் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கடந்த முறை 12வது இடத்தில் இருந்த தமிழகம் 18 வது இடத்திற்கு வந்துவிட்டது. கர்நாடகம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய மாநிலங்கள் நம்பிக்கை அளிக்கும் மாநிலங்களாக உள்ளன. தமிழகம் தில்லி ஆகிய மாநிலங்கள் தொழில்துறையை மேலும் முடுக்கிவிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தர வரிசைப் பட்டியலில் முதல் 10 மாநிலங்கள்: 1) ஆந்திரப் பிரதேசம், 2) தெலுங்கானா,
3) குஜராத், 4) சத்தீஸ்கர், 5) மத்தியப் பிரதேசம், 6) ஹரியானா, 7) ஜார்க்கண்ட், 8)
ராஜஸ்தான், 9) உத்தராகண்ட் , 10) மகாராஷ்டிரம்…..