• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

November 4, 2016 தண்டோரா குழு

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசைமாறி வடகிழக்கு திசை நோக்கி செல்வதால் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இந்தாண்டு அக்.3௦ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டினை விட இந்தாண்டு பருவமழை குறைவான அளவே பெய்யக்கூடும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.3) நிலவரப்படி அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 140 மி.மீ, காரைக்காலில் 110 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 60 மி.மீ. மழை பதிவானது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கொடவாசல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 50 மி.மீ. மழையும் பதிவானது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், அரியலூர், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5௦மி.மீக்கும் குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசை நோக்கி செல்வதால் தமிழகத்த்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 250 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று திசைமாறி வடகிழக்கு திசை நோக்கி செல்லும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரம், காங்கேயத்தில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது.

  • அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மத்திய மேற்கு வங்க கடலில் இருந்து விலகி செல்லும் நிலையில் நவ.6;ம் தேதிக்கு பிறகு மழை குறைந்த நிலையே காணப்படும் என்றார்.

  • மேலும் படிக்க