• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நொய்யலை மீட்போம் … அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்த சூர்யா

March 27, 2016 tamil.oneindia.com

கோயமுத்தூர்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து, வற்றிய நதிகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. பிஸியான நடிகர் என்றாலும் சமூகப் பணிகளுக்கு நேரம் ஒதுக்க சூர்யா எப்போதும் தயங்கியதில்லை.

தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு சூர்யா உதவிவருகிறார். மே மாதம் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அது தொடர்பான குறும்படங்களிலும் சூர்யா நடித்துக் கொடுத்திருக்கிறார்.

கோவையின் ஜீவ நதியான நொய்யலை மீட்க ‘நொய்யலை நோக்கி’ என்ற பெயரில் நதி புனரமைப்புத் திட்டத்தை, தன்னார்வ அமைப்புகள் தொடங்கியுள்ளன நேற்று ‘நொய்யலை நோக்கி’ திட்டத்தின் துவக்க விழா கோவையில் நடைபெற்றது. அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் சூர்யா “3 மாதங்களுக்கு முன் மழை பெய்தாலும் தற்போது தண்ணீர் இன்றி தவித்து வருகிறோம். இந்த நிலையை மாற்ற நொய்யல் நதியை மீட்க வேண்டும். நதியை தொடக்கத்திலிருந்து புணரமைத்துச் செல்ல 4 மாவட்டங்களைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புடன் இணைந்து இளைஞர்கள், பொதுமக்கள் இங்கு முன்வந்துள்ளனர். இந்த நதியை மீட்டெடுத்து காவிரியுடன் கலக்க வைக்க முடியும்.

நம்மால் இதனை செய்ய முடிந்தால் இது இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணமாக அமையும்” என்று பேசினார். நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் உள்ள 68 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், நொய்யல் நதியில் விடப்பட்டு ஆராதனைகள் செய்யப்பட்டன. இறுதியாக, ‘நொய்யல் நதியை மீட்டெடுத்துக் காப்போம்’ என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் படிக்க