November 7, 2016 தண்டோரா குழு
தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக தில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அஜய் மக்கான் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிராஸ் தில்லி மாநில தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் பேசுகையில்
தில்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் முதல்வரோ மாநிலத்துக்கு வெளியே அரசியல் ஆதாயம் தேடும் பணிகளில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக மாநில அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் குறுகிய கால நடவடிக்கைகளே.
தில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும். இதற்காக நீண்டகால நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் இது குறித்து எதுவும் அறிவிக்காத கெஜ்ரிவால் ஒரு பார்ட் -டைம் முதல்வராக இருந்து வருகிறார். தில்லிக்கு முழுநேர முதல்வர் தேவை என அவர் தெரிவித்தார்.