November 8, 2016 தண்டோரா குழு
காற்று மாசு அதிகமாக இருப்பதால், தில்லியில் நவ.9 முதல் நவ.15 வரை 7 நாட்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் மாசு காரணமாக வரலாறு காணாத வகையில் புகைமூட்டமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள்,மாணவர்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தில்லி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரகூட அச்சமடைந்துள்ளனர். நல்ல முகமூடி அணிந்து வர வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். காற்று மாசுவை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்று மாசு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு,
தில்லி மற்றும் என்.சி.ஆர்., பகுதிகளில் அடுத்த 7 நாளுக்கு கட்டுமானப்பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. ராஜஸ்தான், உ.பி., அரியானா, பஞ்சாப் மற்றும் தில்லி மாநில தலைமைச்செயலாளர்கள் தேவைப்பட்டால்,கலந்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம். இந்த 5 மாநிலங்களில், விவசாய கழிவுகளை எரிப்பதை 5 மாநிலங்களும் தடுக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.