• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவின் 45 ஆவது அதிபர் ஆனார் டொனால்ட் டிரம்ப்

November 9, 2016 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஹிலாரியைத் தோற்கடித்து அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8) நடைபெற்றது. அதில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவியது.

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.39 மணிக்கு) வாக்குப்பதிவு தொடங்கியது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு) வாக்குப்பதிவு முடிந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஒவ்வொரு மாகாணமும் வாக்கு எண்ணிக்கையை தொடங்கிய. சிறிது நேரத்தில் வாக்கு நிலவரங்களும் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் ஹிலாரி, டிரம்ப் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றாலும், சில மணி நேரங்களில் இந்த நிலைமை எதிர்ப்பாராத விதமாய் மாறியது. டிரம்ப் அதிக இடங்களில் முன்னிலை பெற்றார்.

மத்திய மற்றும் மேற்கு பகுதியில் டிரம்ப் அதிக மாகாணங்களில் கூடுதல் வாக்குகள் பெற்றார். அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கிழக்குப் பகுதியில் உள்ள மாகாணங்களில் கூடுதல் வாக்குகளைப் பெற்றார்.

அதன்படி குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் டெக்காஸ், சவுத் கரோலினா, ஒகியோ, வெஸ்ட் வெர்ஜீனியா, அலபாமா, இண்டியானா, சென்டக்கி டென்னஸ்சி, மிசிசிப்பி, மிசௌரி, அர்கன்சாஸ், லவுஸ்லானா, வடக்கு டகோபா, தெற்கு டசோபா, நெப்ரஸ்கா, கன்சாஸ், ஒல்காமா, மர்னடனா, விசாமி, சிகாகோ ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கலிபோர்னியா, நியூயார்க், நியூஜெர்சி, மேரிலேண்ட், கொலம்பியா டி.சி. வெர் மாண்ட், மாசாசூசெட்ஸ், சேவல், கனெக்டிகட், எலே வார், ரோடோதீவு, இல்லினாய்ஸ், கலோரெடா, நியூ மெக்சிகோ ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றார்.

குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெரிய மாகாணங்களின் அதிக வாக்குகள் கொண்ட டெக்சாஸ், புளோரிடாவைக் கைப்பற்றினார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக ஓட்டுகள் கொண்ட கலிபோர்னியாவைக் கைப்பற்றினார். இவை தவிர மைனே (4), மின்னசட்டா (10), லோவா (6), ஒரேகா (7) ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை மக்களின் அமோக ஆதரவைப் பெற்று இருந்தாலும், தேர்வு செய்வோர் அவை (Electoral College) என்றழைக்கப்படும் தேர்தல் சபையில் உள்ள 538 தேர்வாளர்களில் 270 பேரின் வாக்குகளைப் பெறுபவர்கள் அதிபராக முடியும்.

அதன்படி வெற்றிக்குத் தேவையான 270 வாக்குகள் என்ற இலக்கைக் கடந்த டிரம்ப் 276 வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஹிலாரிக்கு 218 வாக்குகளே கிடைத்தன.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஹிலாரிக்குச் சாதகமாகவே இருந்தன. ஒரு சில நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் மட்டுமே டிரம்ப் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தன. இந்த கணிப்புகளைப் பொய்யாக்கி, டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் 45வது அதிபராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க