• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கறுப்புப் பணம் வைத்திருப்போர் மட்டுமே கவலைப்பட வேண்டும் – அருண் ஜேட்லி

November 9, 2016 தண்டோரா குழு

புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வருவதற்கு 3 முதல் 4 வார காலமாகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா ஆகியோர் பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களைப் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

அப்போது அருண் ஜேட்லி பேசியதாவது:

ரூ.500, ரூ.1000 நோட்டுகளைத் திரும்ப பெற்றுக் கொண்டது மத்திய அரசின் நேர்மையான நடவடிக்கையாகும். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இது குறித்துக் கவலைப்பட வேண்டும்.

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வரி சட்டப்படி வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வருவதற்கு 3 முதல் 4 வார காலமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வருவாய்த் துறை செயலாளர் ஹஸ்முக் அதியா பேசியதாவது:

“புழக்கத்துக்கு வர இருக்கும் புதிய ரூபாய் நோட்டுகளைக் குறைந்த அளவே எடுக்க அனுமதிக்கப்படும். இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் சப்ளை செய்யப்பட்டு உள்ளன.

நவம்பர் 11 ம் தேதி முதல் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் (ஏடிஎம்) புதிய ரூ.500, ரூ. 2000 நோட்டுக்களை மக்கள் பெற முடியும். நவம்பர் 11 முதல் வழக்கம் போல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியும்”.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். மையத்தில் தினசரி ரூ. 2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். வங்கியில் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், வாரத்துக்கு ரூ. 20 ஆயிரம் மட்டுமே எடுக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க