November 11, 2016 தண்டோரா குழு
தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதன் பின் வங்ககடலில் உருவான தாழ்வு மண்டலம் மூலம் மழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் அதுவும் ஆந்திரப் பிரதேசம் நோக்கி நகர்ந்துவிட்டதால் மழை பெய்யவில்லை. இதனிடையே மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நவம்பர் 11, 12 ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு தெற்கே மேலடுக்கு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் படிப்படியாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இதே போல் அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவான மேலடுக்கு சுழற்சி தற்போது மாலத்தீவு வரை பரவியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழை மேலும் தீவிரம் அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்து