November 11, 2016 பா.கிருஷ்ணன்
ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த நோட்டுகளை குறைந்த விலைக்கு விற்போர், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு அதிக விலையில் தங்கம் விற்கும் வியாபாரிகள், ஹவாலா வணிகர்கள் ஆகியோரிடம் வருமான வரி சோதனை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
தில்லி, மும்பை, சண்டீகர் ஆகிய நகரங்களில் இந்த சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.
அவர்கள் கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி கைவசம் வைத்திருக்கும் இந்திய ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை எழுத்துமூலம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மொத்தம் ரூ. 14.2 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகள்புழக்கத்தில் உள்ளன என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.