• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இஸ்ரேல் அதிபர் ரியூவென் ரிவிலின் இந்தியா வருகை

November 14, 2016 தண்டோரா குழு

இந்திய – இஸ்ரேல் நாடுகளுடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இஸ்ரேல் அதிபர் ரியூவென் ரிவிலின் எட்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை (நவ. 14) மும்பை வந்தார்.

இஸ்ரேல் நாட்டு அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்களுடன் காலையில் மும்பை விமான நிலையம் வந்து சேர்ந்த அவர், தில்லிக்குப் பயணமாகி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு திட்டங்கள் அமைக்கப்பட்டு வரும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்கிறார்.

மும்பையில் இருக்கும்போது, இஸ்ரேல் அதிபர், மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் மும்பை சபாத் வீட்டில் தங்கி இருந்த சுமார் ஆறு யூதர்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகூரத் தக்கது. பின்னர், இஸ்ரேல் அதிபர் ரிவிலின் மும்பை தாக்குதல் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.

சண்டிகாரில் நடைபெறும் வேளாண் தொழில்நுட்ப (அக்ரோ-டெக்) மாநாட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் இஸ்ரேல் அதிபர் ரிவ்லின் கலந்து கொள்கிறார். பின்னர் மகாத்மா காந்தியிடன் நினைவிடத்திற்குச் செல்லும் ரிவ்லின் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார். அதையடுத்து, முதல் உலகப்போரின் போது இறந்த இந்தியர்களுக்கும் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்துகிறார்.

ரிவ்லின் இந்தியா புறப்படுவதற்கு முன், “இஸ்ரேலும் இந்தியாவும் புதிய கண்டுபிடிப்புகளும் உத்வேகமும் கொண்டவை. இரு நாடுகளும் பண்டைய பெருமைகளைக் கொண்டவை. அதே சமயம் உயர்தொழில்நுட்ப பொருளாதாரத்தைக் கட்டமைத்த நாடுகள் ஆகும். நம் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் வலுவான உறவுகளை வலுப்படுத்தி, 25 ஆண்டுகால ராஜீய உறவுகளைக் கொண்டவை.

இந்த நட்பு மேலும் மேலும் நெருக்கமாகும் வகையில் இந்தப் பயணம் உதவும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க