• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு ரூ. 6000 கோடியை அளித்த தொழிலதிபர்!

November 14, 2016 தண்டோரா குழு

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ. 1000, 500 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் முதல் வெற்றியாக சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.6000 கோடியை அரசுக்கு அளித்துள்ளார்.

இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இருப்பதாகக் கூறி அதனை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ம் தேதி ரூ.1000, 500 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இதனால், தங்களிடம் உள்ள 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

இருப்பினும் நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரவில்லை. இதனால், பல இடங்களில் ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனினும், மத்திய அரசின் பல்வேறு நிபந்தனைகளால் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தன்னை உயிரோடு எரித்தாலும் கருப்பு பணத்துக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தபோவதில்லை என கண்ணீர் மல்க பேசியுள்ளார். தற்போது அவரது முயற்சிக்கு பலன் அளிக்க துவங்கியுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை கேட்டு சூரத்தைச்சேர்ந்த தொழிலதிபரான லால் ஜீ பாய் படேல் என்பவர் தன்னிடமிருந்த ரூ. 6000 கோடி பணத்தை அரசாங்கத்திடம் பணமாக ஒப்படைத்துள்ளார்.

தற்போதைய ,அறிவிப்பின் படி, ரூ. 6000 கோடியை இவர் மாற்ற அரசுக்கு வரியாக 30 சதவீதம் அதாவது ரூ. 1,800 கோடி செலுத்த வேண்டும். அத மட்டுமின்றி வரிக்கான 200 சதவீதம் அபராதம் ரூ. 5, 400 கோடி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது பணத்தை மாற்ற முன்வந்துள்ளது பெரும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வைர வைர வியாபாரியான அவர், சமீபத்தில் தீபாவளி போனஸாக தன்னிடன் வேலை தொழிலாளர்களுக்கு வீடு, கார் உள்ளிட்டவற்றை வழங்கி இந்தியா முழுவதும் பிரபலமாக பேசப்பட்டார். அது மட்டுமின்றி பிரதமர் மோடி, தனது பெயர் பொறிக்கப்பட்டிருந்த கோட்டை ஏலத்தில் எடுத்தன் மூலம் லால் ஜீ ஏற்கனவே பிரபலமாக அறியப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க