November 16, 2016 தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் வலுவான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை மாலையில் ஏற்பட்டது. அந்நிலைநடுக்கம் 5.3 ரிக்டராகப் பதிவாகியுள்ளது.
அந்நகரை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் வட கிழக்கு மாநிலமான படக்ஷானில் இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டராகப் பதிவாகியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின் அறிவிப்புப்படி, ஜுர்ம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 192.8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தொடங்கியது.
ஆனால், இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், 5.4 ரிக்டர் அளவில் காபுல் மற்றும் வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. அதே போல் கடந்த அக்டோபர் மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவு பதிவாகியது. அதில் சுமார் 115 பேர் உயிரிழந்தனர் 500 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும், அந்த நிலநடுக்கத்தால் சுமார் 4,000 வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.