November 16, 2016
தண்டோரா குழு
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக பாதிப்பு காரணமாக தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 7-ஆம் தேதி மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சேர்க்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இது குறித்து ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ள அவர், “சிறுநீரக கோளாறு காரணமாக நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன். தற்போது டயாலிசிஸ் நடைபெற்று வருகிறது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இறைவன் அருள்புரிய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது உடல்நிலை குறித்து நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இதனைப் பதிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.