• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“புது ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏ.டி.எம். மாற்றும் பணியில் 50 ஆயிரம் பேர்”

November 28, 2016 தண்டோரா குழு

புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ.டி.எம். இயந்திரங்களையும் மாற்றி அமைக்கும் பணியில் 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரித்தார்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை 100 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. ஏனெனில், பொதுமக்கள் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்டதாலும், டெபாசிட் செய்து வருவதாலும் வங்கியில் இருப்புத் தொகை அதிகரித்துள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு வெளியான பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலையை இந்திய ரிசர்வ் வங்கி நாள்தோறும் கவனித்து வருகிறது. பொதுமக்களுக்கு வழங்குவதற்குப் போதுமான அளவு பணம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப அனைத்து ஏ.டி.எம். இயந்திரங்களையும் மாற்றி அமைக்கும் பணியில் நாடு முழுவதும் 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்ற நோட்டுகளை ஈடு செய்யும் வகையில் புதிய நோட்டுகளை அளிக்கப் போதுமான கரன்சி தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில், பொதுமக்கள் டெபிட் கார்டு, டிஜிட்டல் வாலட் போன்ற ரொக்கமில்லாத பணப் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் எளிதாகவும், குறைந்த செலவிலும் நிகழும். இதனால், இந்தியா பல்வேறு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ரொக்கத்தை அதிகம் பயன்படுத்தாத பொருளாதார சக்தியாக உருவெடுக்கும்.

பொதுமக்கள் கார்டுகளைப் பயன்படுத்த வசதியாக “தேய்ப்பு இயந்திரங்களை” (ஸ்வைப்பிங் மெஷின்) வியாபாரிகளுக்கு அதிக அளவில் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து வங்கிகளுடன் தினமும் ஆலோசிக்கப்படுகிறது. முதலில் இருந்ததைவிட இப்போது வங்கி, ஏடிஎம் வாயில்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பது பெருமளவில் குறைந்துள்ளது.

பொதுச் சந்தைகள் எவ்வித பாதிப்புமின்றி செயல்பட்டு வருகின்றன. நுகர்பொருள்கள் விற்பனை குறைந்துள்ளதாகத் தகவல் இல்லை. பணத்தை வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியும் முழுவீச்சில் நடக்கிறது.

வங்கி ஊழியர்கள் மிகக்கடினமாகப் பணியாற்றி வருகிறார்கள். நேர்மையான குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க இந்திய ரிசர்வ் வங்கி உறுதிபூண்டுள்ளது என்றார் உர்ஜித் படேல்.

மேலும் படிக்க