November 29, 2016
தண்டோரா குழு
கோவை அரசு பொது மருத்துவமனை வெளிப்புற பகுதியில் அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ள சாக்கடையில் கால்வாய் அடைப்பின் காரணமாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் கசிகிறது.
கோவை அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மருத்துவமனையின் பின்புறத்தில் கோவை அரசு கலை கல்லூரி அமைத்துள்ளது.
மருத்துவமனை வெளிப்புறப் பகுதியில் இருந்து அரசு கலைக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ள சாக்கடையில் கால்வாய் அடைப்பின் காரணமாக துர்நாற்றத்துடன் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் கசிந்து செல்கிறது. இதனால், மருத்துவமனை வளாகத்தின் அருகே சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
இதைத் தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். ஆனால், அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. எனவே, மருத்துவமனை அருகே நோய் பரவும் சூழல் உள்ளதால், இதனை விரைந்து சரிசெய்ய வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.