December 1, 2016 தண்டோரா குழு
அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் புதன்கிழமை (நவம்பர் 3௦) இரவு ஆபாச வார்த்தைகளால் பதிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரவு 8:30 மணியளவில் மர்ம நபர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஊருடுவி எட்டு ஆபாச பதிவுகளைப் பதிவேறியுள்ளனர். அந்தப் பதிவுகள் ஒரு மணி நேரத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், அதைத் தொடர்ந்து புதிய பதிவுகள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.
ஊருடுவிய மர்ம நபர்கள் ராகுல் காந்தியின் புகைப்படத்தை நீக்கிவிட்டனர். அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @OfficeOfRG என்பதற்குப் பதிலாக ஆபாசமானதை மாற்றியுள்ளனர். அவருடைய ட்விட்டர் கணக்கு மீண்டும் சரி செயப்பட்டு ஆபாசமானவை எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜெவாலா கூறியதாவது:
எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் விவேகமான குரலை அழுத்தவோ மக்கள் பிரச்சினைகளை அவர் தைரியமாக எழுப்புவதை இத்தகைய கீழ்த்தரமான தந்திரங்கள் மூலம் நிறுத்தவோ யாராலும் முடியாது. இத்தகைய, நேர்மையற்ற நியாயமற்ற மற்றும் போக்கிரித்தனமான செயல் பொதுவுடைமை எதிர்ப்புக் கொள்கை கொண்டவர்களின் குழப்பமான. பாதுகாப்பற்ற முறையைத்தான் பிரதிபலிக்கிறது என்றார் ரந்தீப் சூர்ஜேவாலா.
இதையடுத்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவில் புகார் அளிக்கபடும் என்று காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரணவ் ஜா தெரிவித்தார்.