• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இணையவழியில் வரும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம்

July 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை துறை அலுவலர்களை கொண்டு இணையவழியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்ட விவசாயிகள், விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை இணைய வழியாக தெரிவித்து தீர்வு காணும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் சென்று பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விவசாயிகள் நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிரச்சினைகளை விண்ணப்பங்களாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க