December 5, 2016 தண்டோரா குழு
சபரிமலை சபரி பீட வனப்பகுதியில் 12 பிளாஸ்டிக் பீப்பாய்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 360 கிலோ கிராம் வெடிமருந்து சனிக்கிழமை (டிசம்பர் 3) கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து காவல் துறையினர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறியதாவது:
சுவாமி அய்யப்பன் கோவில் அருகே உள்ள சபரி பீடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் புதர் மறைவில் 12 பிளாஸ்டிக் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டன. ஒவ்வொரு பீப்பாய்களில் 3௦ கிலோ மொத்தம் 360 கிலோ எடையை கொண்டவை.
டிசம்பர் 6, பாப்ரி மசூதி இடுப்பு தினமாக இருப்பதாலும், ஏற்கனவே சபரிமலைக்குத் தீவிரவாதிகள் மிரட்டல் இருந்ததாலும் அங்கு மூன்று நாள் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டது. காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் முயற்சியால் இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
ஐயப்பன் மலை கோவிலில் ஜனவரி நடுப்பகுதியில் முடிவுக்கு வரும் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் அங்கு வருகிறாகள். அவர்கள் நன்கு சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் சன்னிதானம் அருகே பராமரிக்கப்பட்டு வரும் ஒரு இடத்தில் இந்த வெடி பொருள்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த வெடி பொருள்களை தலைமை கட்டுப்பாட்டாளர் ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சபரி பீடத்தில் ‘விஷு’ விழாவின்போது ‘வெடிவிழா’ என்னும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக இந்த வெடிபொருள்கள் கொண்டு வந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், வனத்துறையினர் இந்த நிகழ்வைத் தடை செய்துள்ளனர். இதனால், தற்போது வாண வேடிக்கை ஒப்பந்ததாரர்களுக்கு எந்த உரிமமும் கிடையாது.
இந்தப் பொருள்கள் தடைசெய்யப்பட்டதால் அவற்றை அங்கேயே போட்டிவிட்டுப் போயிருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து வெடிமருந்து பொருட்கள் சட்டம் 9(B)(1)(b) ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.