• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரசிகர்கள் கொண்டாடும் Netflix உடைய “நவரசா” ஆந்தாலஜி, பாராட்டு மழையில் படைப்பாளிகள் !

August 17, 2021 தண்டோரா குழு

சமீபத்தில் Netflix தளத்தில் வெளியாகியுள்ள “நவரசா” ஆந்தாலஜி தொடரை, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த தொடர் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. திரைத்தொழிலாளர்களின் நலனுக்காக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்த தருணத்தை, இந்திய சினிமாவின் பொன் தருணமாக, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 10 நாடுகளில் இந்த தொடர் Netflix தளத்தில் முதல் 10 இடத்தில் உள்ளது.இந்திய திரைத்துறையின் பெருமை மிகு படைப்பாளியாக கொண்டாடப்படும் இயக்குநர் மணிரத்னம் பற்றும் முக்கிய படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி தொடராக, இந்த தொடர் உருவாகியுள்ளது.

தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய பொன் தருணமாக இப்படைப்பு அரங்கேறியுள்ளது.

இத்தொடரின் உலகளாவிய வெற்றி மற்றும் பெரும் வரவேற்பு குறித்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன்கூறியதாவது,

“நவரசா” தொடருக்கு கிடைத்து வரும் பெரும் வரவேற்பு, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல், எல்லைகளை கடந்து பல நாடுகளிலும் இத்தொடர் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் Netflix தளத்தில் முதல் 10 இடத்தில் உள்ளது.

இந்த நவரசத்தின் சங்கமம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. இந்த தொடருக்கான பார்வையாளர்களில் 40% பேர் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்தவர்களே, இத்தொடரின் உட்கருத்து தமிழில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை கவர்ந்ததில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். முன்னனி நட்சத்திரங்கள் மற்றும் படப்பாளிகளுடன் இணைந்து உருவாக்கிய இப்படைப்பு அற்புதமான பயணமாக இருந்தது. Netflix தளத்தின் ஒத்துழைப்பு மூலம், பல உயிர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய அற்புதமான முயற்சி சாத்தியமாகியது மிகப்பெரும் மகிழ்ச்சி என்றனர்.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 209 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

மேலும் படிக்க