September 2, 2021 தண்டோரா குழு
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க கோரி இந்து அமைப்புகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி மேற்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரனா பரவல் குறைந்திருக்கிறது தற்போதைய சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரத்தில் விநாயகர் கோவில் முன்பு இந்து மக்கள் புரட்சிப்படை தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி மீறி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என தடுத்ததால் உண்ணாவிரதம் கைவிடப் பட்டது.
மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தக்கூடாது என்ற ஹிந்து விரோத போக்கை திமுக அரசு கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டிய இந்து அமைப்பினர், இதே போக்கை தொடர்ந்து கடை பிடித்தால் அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.