September 2, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் தனியார் மாணவ-மாணவி விடுதிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மதுக்கரை தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தனியார் விடுதிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது தனியார் விடுதிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?, கேரளா மாணவ, மாணவியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என பார்வையிட்டனர். அப்போது சீரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.