December 7, 2016 தண்டோரா குழு
அந்தமானில் பெய்து வரும் மழையால் சுமார் 800 சுற்றுலாப் பயணிகள் அங்கு சிக்கியிருக்கின்றனர். அவர்களால் வெளியேற முடியவில்லை.
சிக்கியுள்ள 800 சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற இந்தியக் கடற்படை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளது.
இது குறித்து கடற்படை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:
அந்தமானில் பெய்துவரும் கனமழையால் 800 சுற்றுல்லா பயணிகள் அங்கு இருந்து வெளிவர முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்ற இந்திய கடற்படை மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளது.
அந்தமானின் சுற்றுலாத் தலமான ஹவேலோக் கடற்கரை பிரபலமானது. ரிட்சி ஆர்ச்சிபேலேகோ என்னும் தீவுகளின் அமைப்பை உருவாக்க ஹெவ்லொக் தீவுகளின் சங்கிலி முக்கியமானது. அந்த தீவு அந்தமானின் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ஹவேலோக் தீவில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் போர்ட் பிளேருக்கு கப்பல்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு வரப்படுவார்கள். அதற்காக பித்ரா, பங்கரம் மற்றும் கம்பீர் ஆகிய கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.